தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியைத் தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாவட்ட வாரியாகக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ், ஐ.ஏ.எஸ்., கிருஷ்ணகிரி மாவட்டச் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் பீலா ராஜேஷ் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அரியலூர் மாவட்டத்திற்குச் சிறப்பு அதிகாரியாக சரவணவேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம்- ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., தர்மபுரி மாவட்டம்- சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்., கன்னியாகுமரி மாவட்டம்- ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்., கரூர் மாவட்டம்- விஜயராஜ் குமார் ஐ.ஏ.எஸ்., விருதுநகர் மாவட்டம்- மதுமதி ஐ.ஏ.எஸ்., தஞ்சாவூர் மாவட்டம்- பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., தூத்துக்குடி- குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ்., மதுரை மாவட்டம்- தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ்., ராமநாதபுரம் மாவட்டம்- சந்திர மோகன் ஐ.ஏ.எஸ்., திருவாரூர் மாவட்டம்- மணிவாசன் ஐ.ஏ.எஸ்., தேனி மாவட்டம்- கார்த்திக் ஐ.ஏ.எஸ்., திருநெல்வேலி மாவட்டம்- அபூர்வா ஐ.ஏ.எஸ்., திருப்பூர் மாவட்டம்- கோபால் ஐ.ஏ.எஸ்., கள்ளக்குறிச்சி மாவட்டம்- நாகராஜன் ஐ.ஏ.எஸ்., தென்காசி மாவட்டம்- அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., திருப்பத்தூர் மாவட்டம்- ஜவஹர் ஐ.ஏ.எஸ்., திருவண்ணாமலை- தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ்., ராணிப்பேட்டை மாவட்டம்- லஷ்மி ப்ரியா ஐ.ஏ.எஸ்., பெரம்பலூர் மாவட்டம்- அனில் மேஷ்ராம் ஐ.ஏ.எஸ். , கோயம்புத்தூர்- ஹர்மந்தர் சிங் ஐ.ஏ.எஸ்., நீலகிரி மாவட்டம்- சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் மாவட்டம்- மங்கட் ராம் சர்மா ஐ.ஏ.எஸ்., சேலம் மாவட்டம்- நசிமுதின் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்டோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்., காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.