மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு போர்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் போர் ஒரு கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் தொற்றுடன். உலகத்தை ஆட்டிப்படைக்கும் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடுகள் வரை அனைத்து நாடுகளும் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் இதையே வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவிலும் இந்த வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கடுமைப்படுத்தியுள்ளது. சமூக விலகலை ஏற்படுத்தும் விதமாக, அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது வருகிறது. இதற்கிடையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு மார்கெட்டில் மக்கள் நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on 16/04/2020 | Edited on 16/04/2020