கேரளாவில் கரோனாவுக்கு துபாயில் இருந்து வந்தவா் முதல் பலியானார்.
நாட்டை துரத்திக் கொண்டிருக்கும் கரோனாவுக்கு இந்தியாவில் மும்பைக்கு அடுத்து அதிகப்படியாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. இங்கு 1,14,500 போ் கண்காணிப்பில் வைக்கபட்டுள்ளனா். 620 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 164 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளனா். மேலும் கரோனா பரவாமல் இருக்க கேரளா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் தினமும் குறைந்தது 10 போ் பாதிக்கபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் இன்று 28-ம் தேதி கரோனா பாதிக்கபட்டு எா்ணாகுளம் கழமசேரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 69 வயதான ஒருவா் இறந்தார். மட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த அவர், கடந்த 22-ம் தேதி துபாயில் இருந்து வந்து எா்ணாகுளம் நெடுமாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கி அங்கிருந்து வாடகை கார் மூலம் வீட்டிற்கு வந்தார். பின்னா் உடல் நிலை சரியில்லாததால் கழமசேரி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கபட்டியிருந்தார்.
இதனையடுத்து அவருடைய மனைவி உட்பட 3 போ் தனிமைபடுத்த பட்ட நிலையில் மனைவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டு அவரையும் கரோனா வார்டில் அனுமதிக்கபட்டனா். மேலும் அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த வாடகைகார் டிரைவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.