கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் 43 போ் பாதிக்கப்பட்டு்ள்ளனா். இதில் குமரி மாவட்டத்தில் 4446 போ் அவரவா் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கபட்டியிருந்த 53 பேரில் 39 பேருடைய ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவா்களுக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லையென்று உறுதிபடுத்தபட்டுள்ளது. 14 பேருடைய ரத்த மாதிரி சோதனையின் முடிவை எதிர்பார்த்து உள்ளனா்.
இந்தநிலையில் இந்த 14 பேரில் 27 வயதான கா்ப்பிணி பெண் ஒருவா் கடந்த 20ஆம் தேதி துபாயில் இருந்து வந்தார். அவரை மருத்துவ அதிகாரிகள் கரோனா பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தி வைத்து வந்தனா்.
இந்த நிலையில் இன்று 29-ம் தேதி அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் கா்ப்பம் அடைந்து 34 வாரங்களே ஆனதால் தாயும் சேயும் மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளனா். கரோனா அச்சத்தில் தனிமை படுத்தபட்ட பெண்ணுக்கு பிறந்த முதல் குழந்தை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.