




Published on 11/04/2020 | Edited on 11/04/2020
நாகர்கோவிலில் இயங்கி வரும் "மக்கள் கூட்டமைப்பு கட்சி" சார்பாக அதன் தலைவரும் பொதுச்செயலாளருமான டாக்டர் பி. சிவகுமார் தலைமையில், உறுப்பினர்கள் இணைந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் கடந்த பத்து நாட்களாக நாகர்கோவில் நகராட்சி பகுதியில் இருக்கும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு, உணவுப் பொட்டலங்களையும், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான தற்காப்பு உபகரணங்களையும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தேவையான தற்காப்பு உபகரணங்களையும் வழங்கி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு உதவி செய்யும் வகையில் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.