ஈரோட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட பெரிய ஹோட்டல்களும், நூற்றுக்கணக்கான சிறிய ஹோட்டல்களும் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஹோட்டல்களில் உணவு சாப்பிடுவோர் இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தது. இவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டங்களிலும் உதவி ஆணையாளர்கள் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் மூன்றாம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆணையாளர் விஜயா பெரியார் நகரில் செயல்பட்டு வரும் ஹோட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு பாஸ் புட் ஹோட்டலில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும், விதிமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த ஹோட்டல் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மொத்தம் 14 ஆயிரத்து 700 ரூபாய் ஒட்டல் உரிமையாளர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. புதிதாக தொற்று பரவிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு செய்து தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.