கரோனா வைரஸ் தாக்குதல் பயம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியும், அத்துமீறுபவர்களை லத்தியால் கவனித்தும் விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை பொருட்கள், பெட்ரோல், காய்கறி உள்ளிட்ட கடைகள் குறிப்பிட்ட நேரம் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் கடைகளில் கூட்டம் அதிகளவில் நின்று பொருட்களை வாங்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
குக்கிராமங்களில் கூட சிறிய மளிகை கடைகள், டீக்கடைகள், காய்கறிகடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கடை முன்பு வெள்ளை நிறத்தில் இரண்டடிக்கு மூன்றடி கட்டம் வரைந்து கட்டங்கள் வரைந்து அவற்றில் இருவர் மட்டுமே நடந்து வந்து பொருட்களை வாங்கிச்சென்ற பின்னர் மற்றவர் வரவேண்டும் என்கிற பொறுப்புணர்வு தாமாகவே ஏற்பட்டுள்ளது.
இதுபோல் ஒரு மீட்டருக்கு ஒருவர் நின்று பொருட்கள் வாங்கினால் நோய் தொற்றாது என்றும் வைரஸ் தாக்கல் ஏற்படாது என கிராமபுற மக்கள் நம்புகின்றனர். அதே அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் அரசின் கட்டுப்பாடுகளுக்கினங்கி கடைகள் திறந்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் நுகர்வோர் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. கடைகாரர்களும் கட்டுப்பாடு விதிக்காமல் கூட்டநெரிசல் அதிகரிக்க, காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் நிளையே இருக்கிறது.