Skip to main content

கரோனா கொடுமை கண்டு மனம் வருந்திய  9ம்வகுப்பு மாணவி செய்த செயல்! 

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
g

 

கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பொது அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனால்,  பல்வேறு கிராமங்களில், பொது இடங்களில் இந்த விழிப்புணர்வை பொதுமக்களில் பலரும் பின்பற்றுவதில்லை.  இதை கண்டு மனம் வருந்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் செயலை அனைவரும் பாராட்டுகின்றனர்.

 

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ளது புதுப்பாளையம் கிராமம். இந்த  கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி.  இவர் அவரது ஊரில் பொதுமக்கள் கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள்  அறிவித்த சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாமல் தெருக்களில் பொது இடங்களில் நடப்பதும், கும்பல் கும்பலாக கூடுவதும் தெருக்களில் நடப்பதும் ஆக  இருந்துள்ளனர்.

இதைநேரில்  பார்த்த மாணவி ஷாலினிக்கு மன வேதனையாக இருந்தது. இந்த மனிதர்களிடம் நாம் நேரடியாக ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும். இப்படி கும்பலாக கூடக் கூடாது, நடந்து செல்லக் கூடாது என அறிவுரை சொன்னால் அவர்கள் நீ என்ன சின்ன பிள்ளை உனக்கு என்ன தெரியும் என்று நம்மை கடிந்து கொள்வார்கள் என்பதை உணர்ந்தார்.

அதே நேரத்தில் இந்த சமூக மக்களுக்கு நம்மால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  அதற்கு  நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் ஏற்பட்டது. உடனே அவர் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளில் படிப்பு சம்பந்தமாக பயன்படுத்தும் சார்ட் அட்டைகளை வாங்கிவந்து அவைகளில் கொரானாநோய் மிகவும் கொடூரமானது அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,  அதற்காக நாம் தனித்துத் இருப்போம் என்பது போன்ற வாசகங்களை எழுதி,  எழுதி ஊரில் மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் மக்கள் பார்வையில் படும் விதமாக ஆங்காங்கே ஒட்டி வைத்துள்ளார்.  இதை படித்த சிலர் ஒரு பள்ளி மாணவிக்கு நம்மீது  இருக்கும் அக்கறை நமக்கும் இருக்க வேண்டும் என்று அந்த மாணவியை பாராட்டியுள்ளனர். 

மாணவியை பாராட்டினால் மட்டும் போதாது, மாணவியின் வாசகத்தை  ஊர் மக்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்கிறார்கள் அவ்வூரில் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள்.

 

சார்ந்த செய்திகள்