




நாடுமுழுவதும் இன்று கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 166 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 160 மையங்களில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும், 6 மையங்களில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
26 மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் என தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று (16/01/2021) துவங்கி வைத்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் துவங்கி வைத்து முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.