
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 52 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 56 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 19 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 21 என்று இருந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று கரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,025 ஆக அதிகரித்துள்ளது.
தற்பொழுது வரை மருத்துவமனைகளில் 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 96 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 34,13,841 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று மட்டும் 31,568 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புக்கள் முற்றிலும் இல்லாத நிலையில் இருப்பதை போன்று, நோய்தொற்று இல்லாத நாளை காண அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்.