திருச்சியில் கரோனா தடுப்பு குறித்து நடவடிக்கைகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது…
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கரோனா நோய் குறித்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் இருக்கும் இடங்களை தேடிச்சென்று பரிசோதனை செய்து வருகிறோம். இதன் அடிப்படையில் தமிழகத்தில் 8.5 சதவீதமாக உள்ளது. இதுவே திருச்சியில் 5.96 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 6 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கரோனோ நோயாளிகளுக்கென்று 1 இலட்சத்து 29 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில் தனியார் மருத்துமனைகளுக்கு 10 ஆயிரத்து 432 படுகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் அரசு மருத்துமனையில் 610 படுக்கை வசதிகள் உள்ளது.
அரசு விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணங்கள் வசூல் செய்தாக வந்த புகாரின் அடிப்படையில் இரண்டு மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10 தனியார் மருத்துமனைகள் நோயாளிகளிடம் கூடுதலாகப் பெற்ற கட்டணத்தைத் திரும்ப வழங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகள் நிரம்பவில்லை. சில குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு மட்டுமே சிலர் படையெடுப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து 104 மூலம் புகார் கொடுக்கிறார்கள்.
அரசு மருத்துமனையில் மட்டுமே 3 ஆயிரத்து 500 வெண்டிலேட்டர்கள் உள்ளது. திருச்சியில் 136 வெண்டிலேட்டர்கள் உள்ளது.
தமிழகத்தில் சளி டெஸ்ட், அதற்கு அடுத்து எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், இது இல்லாமல் கோவிட் இரத்த மார்க் டெஸ்டு எடுக்கிறோம்.
கரோனோ பரிசோதனையில் சளி மாதிரி பரிசோதனை செய்த போது நெகட்டிவ் என்று வரும் நோயாளி சி.டி. ஸ்கேன் செய்யும் போது பாசிட்டிவ் என்று வருகிறது. இது போன்று பரிசோதனை முடிவில் சி.டி. ஸ்கேன் மூலம் நோய் உறுதி செய்யப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.