தமிழகத்தின் மத்திய மண்டல பகுதிகளான திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் வரையில் கொரோனா பாதிப்பு அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்க எண்ணில் இருந்தது. ஆனால் கடந்த 2 தினங்களாக பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இரட்டை இலக்க எண்ணாக மாறியுள்ளது. இதனால் கரோனா பரிசோதனை செய்யப்படுவது அதிகரிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் 1,600 படுக்கைகள், 21 கிலோ ஆக்ஸிஜன் உள்ளிட்டவகைள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தடையில்லா ஆக்சிஜன் வசதிகளுடன் கரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் இருக்கிறது. பொதுமக்கள் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.