
உழைப்பின் மூலம் மக்களிடம் பெறுவதை அந்த மக்களுக்கு கொடுத்து நன்றிகடன் செய்யும் தொழிலதிபர்கள் இருக்கிறார்களா என்பதை தேடித் தேடித்தான் பார்க்க வேண்டும். ஆனால், தேட வேண்டியதில்லை. சில கருணை உள்ளங்கள் உண்டென்றால் அதில் இவர்களது பெயர் எப்போதும் முன்வரிசையில் இருக்கும். ஆம் அப்படிப்பட்ட தொழிலதிபர் தம்பதிகள்தான் இவர்கள்.
உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் சக்தி மசாலா நிறுவனம்தான் அது. தமிழக கொடூர கரோனா வைரஸ் எதிர்ப்பு போரில், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உதவும் வகையில், முதன்முதலாக சக்தி மசாலா நிறுவனம் சென்ற மார்ச் 30ம் தேதி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 கோடியை வழங்கியது.
தற்போது மேலும் தனது உதவிக்கரத்தை கொடுத்துள்ள இந்நிறுவன இயக்குனர் திருமதி சாந்தி துரைசாமி அவர்கள், "சுகாதாரம், வருவாய்துறை, காவல்துறை, உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, தீ அணைப்பு துறை, மாநில பேரிடம் மேலாண்மை துறை, உள்ளாட்சி துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், களப்பணியாற்றிவரும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைவரும் ஒருங்கிணைந்து கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்கால அடிப்படையில் இரவு, பகலாக ஓய்வின்றி கூர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதை சக்தி மசாலா நிறுவனம் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து அனைவருக்கும் எங்களது வணக்கத்தையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மே 11 ம் தேதி இரண்டாவது முறையாக ரூபாய் 5.10 கோடி தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம்" என்றார். இதுவரை சக்தி மசாலா நிறுவனம் தமிழக முதல்வரின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிகைகளுக்காக மொத்தம் ரூபாய்.10.10 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உதவும்கரத்தை உறுதிபடுத்தியுள்ளது.
சக்தி மசாலா நிறுவனம் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு துணை நிற்பதுபோல், தமிழகத்தில் தொழில் புரியும் நிறுவனங்களும் முன்வர வேண்டும்.