தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், உயிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்பொழுது சென்னையில் 18 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 15,127 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்ட 87,235 பேரில் 15,127 பேருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனால் சென்னையில் மொத்தம் இதுவரை 70, 651 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா பாதிப்பால் 1,456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரேநாளில் 13,174 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,977 ஆக குறைந்துள்ளது. பலர் குணமடைந்து வீடு திரும்பியதால் கோடம்பாக்கம் மண்டலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. செங்கல்பட்டில் மேலும் 255 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் 10,282 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 361 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு என்பது 4,004 ஆக அதிகரித்துள்ளது.