Skip to main content

மதுரையில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
uj

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தென் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. விருதுநகர், மதுரை மாவட்டங்களில் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. மதுரையில் இன்று தற்போது வரை 240 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,045 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்