Published on 19/04/2018 | Edited on 19/04/2018

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள காடுவெட்டி ஜெ.குருவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று திடீரென்று உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜெ.குரு உடல்நலம் பெற வேண்டி பா.ம.க.வினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி மற்றும் அவரது மனைவி சவுமியா அன்புமணி ஆகியோர் வடபழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்கள்.