Published on 21/01/2021 | Edited on 21/01/2021

தேனி மாவட்டத்தில் முதல் பெண் கலெக்டராக பல்லவி பல்தேவ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அதிலிருந்து தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவந்தவர், அரசு விழாக்களிலும் தொடர்ந்து பங்கேற்று துணை முதல்வர் ஓபிஎஸ்சின் ஆசியோடு தொடர்ந்து நீடித்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென கலெக்டர் பல்லவி பல்தேவ்வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்த்து கரோனா பரிசோதனை செய்து பார்த்தபோது நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. உடனே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள அதிகாரிகளும், முக்கியப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் கலெக்டர் பல்லவி பல்தேவ் பூரண குணமடைந்து வர வேண்டுமென்று வாழ்த்தி வருகிறார்கள்.