தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 2,731- ல் இருந்து 4,862 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 4,824 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேர் என 4,862 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,17,611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கரோனா பாதிப்பு 4,862 ஆக உள்ளது.
சென்னையில் மேலும் 2,481 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டில் 290 ஆக இருந்த ஒருநாள் கரோனா பாதிப்பு தற்போது 596 ஆகவும், கோவையில் 120 ஆக இருந்த பாதிப்பு 259 ஆகவும், திருவள்ளூரில் 147 ஆக இருந்த பாதிப்பு 209 ஆகவும், வேலூரில் 105 ஆக இருந்த பாதிப்பு 184 ஆகவும், காஞ்சிபுரத்தில் 54 ஆக இருந்த பாதிப்பு 127 ஆகவும், தூத்துக்குடியில் 42 ஆக இருந்த பாதிப்பு 123 ஆகவும் உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரியில் 97 பேருக்கும், திருப்பூரில் 80 பேருக்கும், சேலத்தில் 75 பேருக்கும், ராணிப்பேட்டையில் 68 பேருக்கும், மதுரையில் 52 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 9 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,814 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது." இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.