தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளதாகவும், எனவே தமிழ்நாட்டில் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று (05.06.2021) வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கரோனா தாக்கம் குறைந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்த 17 மாவட்டங்களைப் போலவே மற்ற மாவட்டங்களிலும் விரைவில் தொற்று பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ள சுகாதாரத்துறைச் செயலாளர், தேனி மாவட்டத்தில் மேலும் 355 பேருக்கு கரோனா உறுதியானதால் அங்கு மொத்த பாதிப்பு 38,649 ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.