Skip to main content

7 வது நாளாக சென்னையில் 1000-ஐ தாண்டிய கரோனா!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

 Corona crossed 1000 in Chennai for the 7th day!

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,743 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,717 இருந்து 18,378 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,103 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததால் இதுவரை தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,028ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,011 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 1,062 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் ஏழாவது நாளாக கரோனா பாதிப்பு 1,000 என்ற நிலையில் தொடர்கிறது. செங்கல்பட்டில்-408 பேருக்கும், கோவை-125, குமரி-59, திருவள்ளூர்-184, காஞ்சிபுரம்-124, விழுப்புரம்-43, நெல்லை-86, தூத்துக்குடி-49, மதுரை-37, சேலம்-41, திருச்சி-93, ராணிப்பேட்டை-32 பேருக்கு என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்