Published on 29/05/2020 | Edited on 29/05/2020

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 874 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 618 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகள் 94 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடலூரிலிருந்து பயிற்சிக்காக வந்த ஐந்து கைதிகளிடம் இருந்து கரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.