அரிபாரதிகரோனாவின் ஆபத்தை உணர்ந்து பலர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பாக உள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் சில முரட்டுமனிதர்கள் வரும் ஆபத்தை உணராமல் கட்டுப்பாடுகளை மீறி, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுற்றித்திரிகிறார்கள்.
இந்த நோயை கட்டுப்படுத்த ஆங்கில மருத்துவத்தில் இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இப்படிப்பட்டவர்கள் உலக அளவில் இருந்தும் தற்போதைய கரோனா உட்பட 50 நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்கிறார்கள்.
மக்களை மிரட்டும் கொரோனா அயல்நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமே நம் நாட்டு மக்களுக்கு பரவி வருகிறது. சீனாவில் இன்நோயின் தாக்கம் பிப்ரவரி முதல் தீவிரமாக பரவியது. இந்தியா மட்டும் கடந்த 15ஆம் தேதி தடுப்பு நடவடிக்கைகளில இறங்கியது. சீனாவில் பரவிய பிப்ரவரி மாத காலகட்டத்திலேயே நமது இந்தியவிலும் அயல் நாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அப்போதே தனிமைபடுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.

விமானத்தில் வந்தவர்களை பெயரளவிற்கு பரிசோதனை செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் கொரோனா தொற்று இருந்து அது தீவிரமாகி அவர்களுடன் இருந்து மற்றவர்களுக்கும் பரவிவருகிறது என்பது அனைவரும் அரிந்ததே.
பொதுவாக டெங்கு, மலேரியா, பறவைகாய்ச்சல், பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா, போன்ற நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியது சித்த மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலவேம்பு கசாயம். அதேபோல் இப்போதும் சித்தமருத்துவ நிபுணர்கள் கபசுரக்குடிநீர், வாதசுரநீர் ஆகிய இரண்டு மருந்துகளும் கரோனாவை கட்டுப்படுத்தும் என கூறிவருகிறார்கள். இதை பயன்படுத்த முதலில் அரசுகள் தயக்கம் காட்டியது. இப்போது பிரதமர் மோடி சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கருத்தைக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. .
போர்க்கால அடிப்படையில் மாற்று மருந்து கண்டுபிடிப்பது அல்லது மாற்றுவழி கண்டறிவது மிகமிக அவசியம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரவேண்டும்.
ஒருவருக்கொருவர் நோய்தொற்று இருக்கிறதோ இல்லையோ விலகி இருக்கவேண்டும். கும்பல் கூடுவதை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
மக்களும் இந்த நோயினால் மற்ற நாடுகளில் நடக்கும் சம்பவங்களை ஊடகங்கள் மூலம் பார்த்து வருகிறார்கள். அதை உணர்ந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் பாதுகாத்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.