தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், இதுவரை தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்த 107 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்தவர்களுக்கு சேர்ந்த 128 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக தமிழகத்தில் பெரம்பலூரில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசாருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், களப்பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு கரோனா பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் தீயணைப்புத் துறையில் 21 பேருக்கு கரோனா இருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இந்த 128 பேரில் 85 பேர், சென்னை காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
திருவள்ளூரில் 12 போலீசாருக்கும், கோவையில் 7 போலீசாருக்கும், மதுரையில் 5 போலீசாருக்கும் என களப்பணியில் இறங்கிய காவலர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது.