Skip to main content

தெப்பத் திருவிழாவில் தகராறு; காக்க வைக்கப்பட்ட மூலவர்; மனம் நொந்த பக்தர்கள்

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
Controversy at Tiruthani Teppath festival; Heartbroken devotees

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி கார்த்திகை தெப்பத் திருவிழா நிகழ்ச்சியில் குளறுபடியால்  பல மணி நேரம் சாமியை காக்க வைத்து, சாமி தூக்கும் நபர்களுடன் காவல் துறையினரும் திருக்கோவில் நிர்வாகத்தினரும் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா ஐந்து நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான் சுமைதாரர்கள் மூலம் தூக்கி வரப்பட்டு, மலைக் கோவில் அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடைசி ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் தெப்பத் திருவிழாவில் ஏழு சுற்றுகள் முருகப்பெருமான் வலம் வருவார்.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் நிர்வாகத்தினருக்கும், சாமி தூக்கும் நபர்களுக்கும், தெப்பத்தில் ஏறுவதில் காவல்துறைக்கு ஏற்பட்ட வாய்த்தகராறு ஏற்பட்டது. இத்தனை பேர் மட்டும் தான் ஏற வேண்டும் என்று கண்டிஷன் போட்டது காவல்துறை. இதனால் அங்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் உற்சவர் முருகப்பெருமான் தெப்பத்தில் சில மணி நேரம் காக்க வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கு முழு காரணம் திருக்கோவில் இணை ஆணையர் செயலாளர்கள் அருணாசலம் மற்றும் அறங்காவலர் குழு அவர்கள் தான் என்று பக்தர்கள் திட்டிக் கொண்டனர்.

சாமியை காணவந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இவர்கள் சண்டையை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சரியான திட்டமிடல் என்பது திருக்கோவில் நிர்வாகத்திற்கும் மற்றும் திருக்கோவில் அறங்காவலர்களுக்கும் இல்லை என்பதால் யாருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்று சிறிது கூட தெரியாமல் இருந்தனர். கோவில் ஜவான்களுக்கு இறுதிநாள் தெப்ப நிகழ்ச்சியில் மரியாதை தரவில்லை என்று நொந்து கொண்டனர். மேலும் பத்திரிகையாளர்களுக்கும் தெப்ப உற்சவத்தில் இறுதி நாள் நிகழ்ச்சியில் மரியாதை செலுத்தவில்லை என்று ஐந்து நாட்கள் இரவு பகலாக உழைத்த பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

மொத்தத்தில் திருக்கோவில் நிர்வாகத்தினர் ஆளும் கட்சியினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தத் தெப்ப உற்சவத்தில் நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரவே இல்லை. பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் கடமைக்கு ஈடுபட்டனர். ஒரு தெப்பத்தில் 40 பேர் ஏற வேண்டிய இடத்தில் 70 பேர், 80 பேர் ஏறி தெப்ப உற்சவத்தில் கலந்து கொண்டனர். இதில் திமுகவினர், திமுக கவுன்சிலர்கள் மற்றும் அவர்களின்  குடும்பத்தினர்  பாதி பேரும்,  காவல்துறை குடும்பத்தினர் பாதிபேரும் கலந்து கொண்டனர்.

மொத்தத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த திருக்கோவில் செயல்படாத நிர்வாகமாக இருந்து முருக பக்தர்களை வஞ்சிக்கிறது என்று முருக பக்தர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்