Skip to main content

'சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை பேச்சு'- மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சிபிஎம் போராட்டம் அறிவிப்பு

Published on 28/02/2025 | Edited on 28/02/2025

 

'Controversial talk about assault of a minor girl' - CPM protests against the District Collector

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் பேச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சிபிஎம் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசுகையில், ''கடந்த வாரம் சீர்காழியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது. சிறுமிக்கும், சிறுமி குடும்பத்தினருக்கும், அந்த சிறுவனின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

அன்று காலை அந்த சிறுமி சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுள்ளார். அந்த ஆத்திரத்தில் சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். இதில் இரண்டு தரப்புகளையும் பார்க்க வேண்டி இருக்கிறது'' என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் பேச்சைக் கண்டித்து நாளை காலை ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் சிபிஎம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்