Skip to main content

தொடர் மழை; காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 403 ஏரிகள் நிரம்பின

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

 continuous rain; 403 lakes were filled in Kanchipuram, Chengalpattu

 

பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட நேற்று அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.  

 

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 403 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 326 ஏரிகள் 75 லிருந்து 99 சதவீதமும். 139 ஏரிகள் 50 லிருந்து  75 சதவீதமும், 41 ஏரிகள் 25 லிருந்து 50 சதவீதமும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்