
பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் அரசு பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் சிலர் படியில் தொங்கிய படியும் பேருந்தின் பக்கவாட்டில் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து செல்லும் 112 பி என்ற எண் கொண்ட பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்தனர். காலை நேரத்தில் இதுபோன்ற பேருந்தின் ஜன்னல் கம்பி மற்றும் பக்கவாட்டில் தொங்கியபடி பயணித்தது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.