குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்ககளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தனர்.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாத ஆலைகள் மூடி சீல் வைக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை 350 க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 7 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி குடிநீர் கேன் விற்பனையாளர்கள் மற்றும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர், தமிழக அரசு குடிநீர் உற்பத்திக்கான நிரந்தர வழி முறைகளை செயல்படுத்தி தொடர்ந்து தொழில் கூடங்களை இயக்க வழிவகை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.