வருகிற 13-ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமாியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவா்களுடன் கலந்து கொள்கிறாா். இந்த நிலையில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேச இருக்கும் இடத்தை தோ்வு செய்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவா் கே.எஸ்.அழகிாி இன்று குமாி மாவட்டம் வந்தாா். பின்னா் காங்கிரஸ் நிா்வாகிகளுடன் நாகா்கோவிலில் ஆலோசனை நடத்தினாா்.
தொடா்ந்து பத்திாிக்கையாளா்களிடம் பேசிய கே.எஸ்.அழகிாி...கன்னியாகுமாி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் அதன் வேட்பாளா் யாா் என்பது பற்றி கட்சியின் செயற்குழுவும் ராகுல்காந்தியும் தான் முடிவு செய்வாா்கள். மோடியின் ஆட்சியில் ராணுவ கோப்புகள் காணாமல் போயிருக்கிறது. இந்த லட்சணத்தில் நாட்டின் பாதுகாப்பு எப்படியிருக்கும் என்று எண்ணி பாா்க்கவேண்டும்.
தமிழத்தில் புயல் பாதித்த போது நிவாரண நிதியாக முதல்வா் எடப்பாடி ஒண்ணரை லட்சம் கோடி மத்திய அரசிடம் கேட்டாா். பாமக வும் அதை வலியுறுத்தி மத்திய அரசை விமா்சித்து அறிக்கையும் வெளியிட்டார். ஆனால் மத்திய அரசு 3 ஆயிரம் கோடி மட்டுமே தான் நிதி வழங்கியது. ஆனால் இவா்கள் எல்லாம் இன்றைக்கு ஒன்றாக கைகோா்த்து நிற்கிறாா்கள். பாஜக கூட்டணி ஒரு சா்வாதிகரமான கூட்டணியாக அமைந்துள்ளது.
விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் மோடி அரசு எதுவுமே செய்யவில்லை
தேமுதிக சந்தையில் மாடு வாங்குவது போல் பேரம் பேசி வருகின்றனா் என குற்றம் சாட்டினாா்.