கோவையில் இராமநாதபுரம் பகுதியில் 80 அடி சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசார் முறையாக இது குறித்து புகார் அளித்தார். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். பின்னர் இன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது: இந்த பகுதியில் பள்ளிகள் மருத்துவமனை பொதுமக்கள் கூடும் முக்கிய இடம் மற்றும் கோவில்களும் நிறந்து உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் உபயோகப்படுத்தும் மிகவும் முக்கியமான சாலை. எனவே இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த நிலையில் ஏற்கெனவே அடைக்கப்பட்ட இந்த கடையை மீண்டும் திறந்து உள்ளனர். தற்போது தான் பொதுமக்கள் அனைவரும் நிம்மதியாக இருந்தோம். ஆனால் தற்போது மீண்டும் கடையை திறந்து உள்ளனர். எனவே இந்த கடையை நிரந்தரமாக அடைக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் கடையை நிரந்தரமாக அடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.