Published on 29/01/2025 | Edited on 29/01/2025
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இரண்டு சிறார்களுக்கு திவ்யா என்ற பெண் யூடியூபர் பாலியல் சீண்டல் செய்து அதனை படம் பிடித்து பணம் திரட்ட முயற்சித்ததாக புகார்கள் எழுந்திருந்தது. இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக கொடுத்த புகார் அடிப்படையில் திவ்யா, சித்ரா, ஆனந்த், கார்த்திக் ஆகிய நான்கு பேரையும் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.