கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். தற்போது டெங்கு, மலேரியா காய்ச்சல், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டவர்கள் காட்டுமன்னார்குடி பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் என்பது கிடையாது. சனிக்கிழமை காலை மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்தனர். ஆனால் மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள்தான் இருந்தனர். இதனால் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மேலும் சரியான முறையில் மருந்து மாத்திரைகள் என்பது கிடையாது காய்ச்சலால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் மருத்துவமனைகள் காண்பித்துவிட்டு பள்ளிக்கு செல்லலாம் என வந்துள்ளனர். பின்னர் மருத்துவமனையில் தாமதம் ஏற்படுவதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
இதேநேரத்தில் காட்டுமன்னார்குடி அருகேயுள்ள உடையார்குடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்வரின் மனைவி சகுந்தலா நாய் கடித்துவிட்டது என்று மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது நாய்க்கடிக்கு மருந்து இல்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தொடர்பு கொண்டு கேட்டபோது நாய்கடிக்கு மருந்து தட்டுபாட்டில் உள்ளதாக கூறியுள்ளனர்.
எனவே காட்டுமன்னார்குடி மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக் கோரியும், இரவு நேரங்களில் மருத்துவர் பணியில் இருக்க கோரியும், மருந்து மாத்திரைகள் தங்குதடையின்றி கிடைக்க வலியுறுத்தியும், நாய் கடிகளுக்கான மருந்தை போதிய இருப்பில் கையில் வைத்திருக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தியுள்ளார். பின்னர் மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் விரைவில் நோயாளிகளையும் பொதுமக்களையும் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மருத்துவமனைக்கு எதிரில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.