Skip to main content

கல்லூரி மாணவ மாணவிகள் நடத்தும் புளுவேல் விளையாட்டு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
கல்லூரி மாணவ மாணவிகள் நடத்தும் புளுவேல் விளையாட்டு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி



உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மாணவ மாணவிகளின் புளுவேல் விளையாட்டு ஒழிப்பு விழிப்புணர்வை மாவட்ட கூடுதல் காவல் கண்கணிப்பாளர் திலகவதி மற்றும் காவல் துணைகண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி மாணவ மாணவிகள் நடத்தும் நீலத்திமிங்கலம்(புளுவேல்) விளையாட்டால் இளைஞர்கள் உயிழக்கப்படுவதை தடுக்கவும் அவர்களை கண்டறியப்பட்டால் அவர்களை மீட்பது குறித்தும் புளுவேல் விளையாட்டு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்கணிப்பாளர் திலகவதி மற்றும் காவல் துணைகண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இப்பேரணி உசிலம்பட்டி போக்குவரத்து பணிமணையில் துவங்கி உசிலம்பட்டி மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

-முகில்

சார்ந்த செய்திகள்