Published on 01/07/2021 | Edited on 01/07/2021

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் இன்று (01.07.2021) ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,
''அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எம்.பில் படிப்பைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.
ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும். பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத் தன்மை அவசியம். 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆகஸ்ட் 1ஆம் தேதிமுதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும். அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் நடத்தப்படும்'' என்றார்.