Published on 12/01/2024 | Edited on 12/01/2024
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறையில் கல்லூரி மாணவிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்திற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்த கிராமப்புற சூழல் மற்றும் கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களை மாணவிகள் ஆடி மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.