Skip to main content

மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கல்லூரியில் மர்மநபர்களா??-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

மதுரை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் மர்மநபர்கள் புகுந்ததாக புகார் எழுந்ததையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

 

madurai

 

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

 

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி ஆவணங்களை பெண் அதிகாரி ஒருவர்  எடுத்துச் சென்றதாக வந்த தகவலின்பேரில் தற்போது மருத்துவக் கல்லூரி அலுவலகம் முன்பு உள்ளார்.

 

வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு  கலால்வரி தாசில்தாரான சம்பூர்ணம் என்ற பெண் அதிகாரி தலைமையில் 4 பேர் புகுந்து உள் சென்று மாலை 5.30 மணிக்கு சில ஆவணங்களுடன் வெளியேவந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து எதிக்கட்சியினர் மதுரை மருத்துவ கல்லூரி நோக்கி வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.

 

இன்றைக்கான சிசிடிவி காட்சிகள் வேண்டும் என சு.வெங்கடேசன் தரப்பில் கேட்கப்பட அதிராகரிகள் தரப்பு சிசிடிவி கேமரா செயல்படவில்லை என  கூறியுள்ளதாக தகவல் கசிய இது வெளியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்