கரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பு கல்வியாண்டில் மட்டும் ஐந்து மாதங்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'கல்வி டிவி'யில் பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. ஆனாலும், மாணவர்களுக்குத் தேவையான கற்பித்தல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பள்ளி திறந்தாலும் கற்பித்தல் குறைவைப் போக்கும் வகையில் தன்னார்வலர்களை வைத்து மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, கற்றுக்கொடுக்கும் வகையில் ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பள்ளி கல்வித்துறையின் 'இல்லம் தேடி கல்வி திட்டம்' குறித்து, சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (25.11.2021) சென்னை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள பெருநகர நடுநிலைப்பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட விழிப்புணர்வு கலைப் பயணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி துவங்கிவைத்து பார்வையிட்டார்.