
கோவை மாவட்டம், கோட்டைமேடு பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அங்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பாக சூழல் நிலவியது.
அலுவலகத்திற்கு நேற்று மாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததையடுத்து, 50- க்கும் மேற்பட்ட மாநகர காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சோதனை முடியும் வரை தொண்டர்கள் அலுவலகத்துக்கு வெளியிலேயே அமர்ந்து முழக்கமிட்டனர். சோதனை நிறைவடைந்த நிலையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.