Skip to main content

ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் அக்கவுண்ட்; காவல்துறையிடமே கைவரிசை காட்டிய கும்பல் 

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

coimbatore police twitter account was hacked

 

கோவை மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளப் பக்கங்கள் தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம், இணையவாசிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.

 

இந்நிலையில்,  நேற்று இரவு கோவை மாநகர போலீசாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை  மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கோவை போலீசாரின் ட்விட்டர் பக்கத்தில்  கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களும், சம்பந்தம் இல்லாத உரையாடல்களும் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறை 'ஹேக்’ செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். ஹேக்கர்களால் முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தை மீட்க, சைபர் கிரைம் பிரிவு போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில்  தற்போது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது.

 

மேலும் அதிலிருந்த  கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்கள் நீக்கப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்