தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டமும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் சுமார் 27 முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 656 குடும்பங்களைச் சேர்ந்த 555 குழந்தைகள் உள்பட 2345 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருமே வீடு உட்பட அனைத்து உடமைகளைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு மட்டுமே கிடைப்பதாக முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கூறுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை என்பதால் முகாம்களில் கடும் குளிர் நிலவுகிறது, கடும் குளிரை தாக்குப்பிடிக்க கம்பளி, தூங்க பாய், நாப்கின், மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உதவி கேட்டு வருகின்றனர். நிவாரண உதவிகள் செய்ய விருப்பம் உள்ளவர்கள் , அவசர உதவிக்கு 9003990629, 9003480139, 9527119747 ஆகிய எண்ணுக்கு தொடர் கொள்ளலாம்.