கோவை மாநகராட்சியில் புதியதாக விதிக்கப்பட்ட
வரிகளை கண்டித்து நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து சரவணம்பட்டி திமுக பகுதி கழகம் சார்பில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய வரி சீராய்வு என்ற பெயரில் குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்ட புதிய வரிகள் விதிப்பை கண்டித்தும், தெருவிளக்குகள் எரியாதது, குப்பைகள் அகற்றப்படாதது, அதிகாரிகளின் அலட்சிய போக்காலும், மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது, சுகாதார சீர்கேடு, பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை கண்டித்து கண்டன கோஷங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் பேட்டியின்போது கூறுகையில்;- மாநகராட்சியின் 100 வார்டுகளிலும், புதிய வரி சீராய்வு என்ற பெயரில் குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் போடப்பட்டுள்ளது. இதுதவிர வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பல ஆயிரக்கணக்கான டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. குடிநீர் சீராக வினியோகிப்பதில்லை. எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. அதிமுக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களின் வேலைகளை பார்ப்பதில்லை, இந்த புதிய வரிகளை வாபஸ் வாங்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சரவணம்பட்டி பகுதி கழக செயலாளர் மாணிக்கம், அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன், கணேசமூர்த்தி, பொருளாளர் கதிர்வேல், நாச்சிமுத்து, மாவட்ட துணைச்செயலாளர்கள் சாந்தி, குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், டி.பி.சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, குறிச்சி பிரபாகரன், சுந்தரம், மாவட்ட அமைப்பாளர்கள் ரவிச்சந்திரன், சிரவை கார்த்திகேயன், தளபதி இளங்கோ, மாலதி நாகராஜ், வழக்கறிஞர் அருள்மொழி. மாவட்ட விவசாய வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜ் உள்ளிட்ட 1000 த்திற்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கலந்துகொண்டனர்.
- அருள்