Skip to main content

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு - முதலமைச்சர் அறிவிப்பு

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Cm stalin has ordered to give full sugarcane in the Pongal gift package

 

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில்  பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும். அதேபோல் பொங்கல் பரிசுத் தொகையானது ஐந்தாயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தன. 

 

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கருப்பு தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு பொருட்களுடன் கரும்பையும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை ஜனவரி 2 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக கரும்பும் சேர்ந்திருப்பதால் இந்நிகழ்வு ஜனவரி 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி 3 ஆம் தேதியில் இருந்து 8 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரும்பு விவசாயிகள் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்