சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, மத்திய அரசின் அங்கீகாரம் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதும், நல்லாட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதலிடம் அளித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாடுபட்ட அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
![CM Palanisamy press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/dlln_Yn2TWp7xz3c5YTXH7KNKav_JTOc1BVE3lVqaZ0/1577513598/sites/default/files/inline-images/111_36.jpg)
இதைத்தொடர்ந்து பொங்களுக்கு மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி வீடுகளில் தொலைகாட்சி பெட்டி இல்லாதவர்கள் பள்ளிக்கு வந்து மோடியின் பேச்சை கேட்கலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம், இது கட்டாயம் கிடையாது என்றார்.
பின்னர் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மற்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன, இதில் தமிழ்நாடு அரசின் நிலைபாடு என்ன என்ற கேள்விக்கு, 1872ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பத்து ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அறிவிக்கப்படும். 1948ல் இற்கென்று தனிச்சட்டம் இயற்றப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால்தான் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது, மக்களின் பொருளாதாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
1995, 2003ல் மக்கள்தொகை கணெக்கெடுப்பில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. 2003ல் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த போது திமுக அத்துடன் அங்கம் வகித்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, அந்த சட்டத்தின் படி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுக காங்கிரஸில் அங்கம் வகித்தது. ஆனால் இப்போது அதை திமுக எதிர்கிறது என தெரிவித்தார்.