Published on 08/09/2020 | Edited on 08/09/2020
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் அதற்கேற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்தும், தளர்வுகளால் கரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.