Published on 25/04/2022 | Edited on 25/04/2022

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று நடைபெற்ற இந்தக் கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள இக்கட்டிடம் நான்கு தளங்களாக கட்டப்படுகிறது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.