Skip to main content

என் இறப்பிற்கு பிறகாவது மதுபானக்கடையை மூடுங்கள்- முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

திருநெல்வேலி சங்கரன் கோவில் அருகிலுள்ள குருக்கள்பட்டியை சேர்ந்த தினேஷ்நல்லவசிவன் என்ற மாணவனின் தந்தை மாடசாமி என்பவர் தினமும் அரசு மதுபான கடையில் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்துள்ளார்.

தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தேர்வுமுடிவிற்காக காத்திருக்கும் மாணவன் தினேஷ்நல்லசிவனிடம் அவருடைய அப்பா குடித்துவிட்டு அடிக்கடி தகராறு மற்றும் ஊரில் சுற்றியுள்ளவர்களிடம் அவப்பெயர் வாங்குவதால் சில நாட்களாகவே தினேஷ் நல்லசிவன் மனஉளைச்சலில் இருந்துள்ளான்.
 

men

 

இறுதியில் தன் தந்தையின் குடிப்பழக்கம் அதிகமாக வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு நேற்று வீட்டை விட்டு வெளியே வந்துள்ளான். மேலும் மன உளைச்சலில் நெல்லை வண்ணையார்பேட்டையிலுள்ள தெற்கு புறச்சாலையில் ஒரு ரயில்வே பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான்.

 

இன்று காலை அவ்வழியே நடைப்பயிற்சி சென்ற சிலர் இதைக்கண்டு பாளையம்கோட்டை போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்தை அடைந்த போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டனர். மேலும் அந்த மாணவனின் அருகில் கிடந்த பேக்கை சோதனையிட்ட பொழுது அதில் ஒரு கடித்தை கண்டெடுத்தனர் அந்த கடிதத்தில் 
 

men

 

என் அப்பாவின் குடிதான் நான் சாக காரணம் எனவே இனியாவது குடிக்காமல் இருக்கவேண்டும். என் இறுதி சடங்கை என் மாமாதான் செய்யவேண்டும் மற்றும் இந்தக் கடிதம் மூலம்  நாட்டின் பிரதமருக்கும் முதல்வருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இனியும் தமிழ்நாட்டிற்கு மதுபானக்கடை வேண்டாம். மூடிவிடுங்கள இல்லாவிட்டால் ஆவியாக வந்து எல்லா மதுபான கடைகளையும் உடைப்பேன் என உருக்கமாக எழுதிவைத்துள்ளான்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம்  பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.       

சார்ந்த செய்திகள்