சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (07/11/2022) பிற்பகல் 03.00 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். வினாத்தாள் முறையில் ஏற்கனவே பின்பற்றப்படும் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.