Skip to main content

சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
citu


சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர்களால் போராடிப்பெறப்பட்ட கட்டுமானம், ஓட்டுனர் உள்ளிட்ட 17 முறைசாரா தொழிலாளர் நலவாரியப்பணிகள் தற்பொழுது முடங்கிக் கிடக்கின்றனர். நலவாரியத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து செயல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளி இறந்தால் வாரிசுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, பொருளாளர் சி.அடைக்கலசாமி மற்றும் நிர்வாகிகள் ப.சண்முகம், பெரி.குமாரவேல், எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், செ.பிச்சைமுத்து, க.சிவக்குமார், சி.மாரிக்கண்ணு, வி.ஆண்டியப்பன், எஸ்.யோகராஜ், கே.ராசு, ஆ.மாயன், எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.

சார்ந்த செய்திகள்