Published on 28/09/2018 | Edited on 28/09/2018
லாரி டிரைவர் வேலை என்பது மிகவும் கடினமானது. பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். மனதில் துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே இந்தத் தொழிலில் நீடிக்க முடியும். அப்படி ஒரு லாரி டிரைவராக இருந்தார் வேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன். அவரே தற்கொலை செய்து உயிரைவிடும் நிலைக்கு காக்கிகளால் தள்ளப்பட்டிருக்கிறார். ஆந்திர மாநில சித்தூர் போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில், தன்னுடைய லாரியிலேயே அவர் தூக்குப் போட்டுக்கொண்டார்.
காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக லாரியுடன் அழைத்துச் செல்லப்பட்ட ராஜேந்திரனைப் போலீசார் மிகவும் துன்புறுத்தியதாகவும், அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டதாகவும், சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, உடலை போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும், குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.