மெரினாவில் குழந்தை கடத்தல்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பப்பு (34). மெரினா உழைப்பாளர் சிலை அருகில் பிளாட்பார்மில், கையில் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அஜித் (2), போலு (1) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந் 27ம் தேதி, பப்புவின் கடைக்கு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் பப்புவிடம், நாங்கள் மிகவும் பசியில் உள்ளோம். குடிக்க தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளனர். பப்பு இரக்கப்பட்டு, தண்ணீர் கொடுத்ததுடன் சாப்பிடுவதற்கு 50 பணமும் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், பப்புவின் 2 குழந்தைகளும் கடையின் அருகில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அந்த 2 பேரில் ஒரு நபர் பப்புவின் 2வது மகன் போலுவை கையில் எடுத்து கொஞ்சி உள்ளார். சிறிது நேரத்தில் பப்பு திரும்பி பார்த்தபோது முதல் மகன் மட்டும் தரையில் தூங்கி கொண்டிருந்தான். 2வது மகன் போலுவை அந்த 2 நபர்களும் கடத்தி சென்றது, தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.